Pages

Tuesday 13 January 2015

காஜல் அகர்வாலுக்கு அமெரிக்காவில் ரகசிய சர்ஜரி? தமன்னா வெளிப்படுத்திய ரகசியம்.

நடிகை காஜல் அகர்வால் அமெரிக்காவுக்கு சென்று முகத்தில் சில அறுவை சிகிச்சை செல்லவிருப்பதாக கடந்த 
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் வதந்தி பரவியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காஜல் அகர்வால் 'நான் இயற்கையிலேயே அழகுதான். அழகுக்காக சர்ஜரி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி ஒரு முட்டாள்தனத்தை நான் எப்பொழுதும் செய்ய மாட்டேன்' என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இன்னும் சில நாட்களில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருப்பது உண்மைதான் என்றும், ஆனால் நான் செல்வது சர்ஜரிக்காக அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

காஜலின் இந்த கருத்துக்கு நடிகை தமன்னாவும் ஆதரவு கொடுத்துள்ளார். அழகு என்பது இயற்கையிலேயே அமையவேண்டும். மேலும் அழகு என்பது சர்ஜரியில் கிடைக்காது. அது பார்ப்பவர்களின் கண்களை பொறுத்து மாறுபடும்' என்று அழகின் ரகசியம் குறித்து கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் விளக்கம் கொடுத்த பின்னரும் தெலுங்கு ஊடகங்கள் இன்னும் காஜல் அகர்வாலின் சர்ஜரி குறித்த செய்திகளை வெளியிட்டுக்கொண்டே தான் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment