Pages

Monday 12 January 2015

கோலிவுட்டில் சரக்கு அடித்த நடிகைகள்:

தலைப்பை படித்துவிட்டு அருகில் உள்ள படத்தையும் பார்த்துவிட்டு வில்லங்கமா எதுவும்
யோசிக்காதீங்க. இவர்கள் தண்ணி அடித்த 
நடிகைகள் தான், மதுஅருந்திய நடிகைகள் தான். நாம் குறிப்பிடுவது நிஜத்தில் அல்ல... சினிமாவில்... 

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஓசைப்படாமல் ஒரு கலாச்சார சீரழிவு நுழைந்து கொண்டிருக்கிறது. அது பெண்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் அதிகமாக இடம்பெறுவது. குறிப்பாக ஹீரோயின்கள். ஏற்கெனவே தமிழ்நாட்டில் டாஸ்மாக் அணைக்கட்டு திறக்கப்பட்டு தண்ணீர் ஆறாக ஓடுகிறது. தமிழ் நாட்டில் குடிக்கும் பெண்களின் சதவிகிதமும் மெல்ல உயர்ந்து கொண்டிருப்பதாக புள்ளி விபரங்கள் பயமுறுத்துகிறது. மேல்தட்டு பெண்களிடம் இருந்த மதுப் பழக்கம் இப்போது அப்பர் மிடில் கிளாஸ் பெண்களிடமும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் நடந்த சில சினிமா நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்துக்கு பின்னால் இருப்பது பெண்களும் மது அருந்துவதுதான் என்பது கசப்பான உண்மை.

பெண்கள் மதுகுடிக்கும காட்சிகள் வைத்து இந்த கலாச்சார சீரழிவுக்கு சினிமாவும் தன் பங்கை சிறப்பாக ஆற்றி வருகிறது. இதற்கு முன்பும் பெண்கள் மது அருந்தும் காட்சிகள் சினிமாவில் இருந்தது உண்டு. அது அவர்கள் மது என்று தெரியாமல் குடித்து விட்டு ஆடுவது போன்று காட்சி இடம்பெற்றது.

ஆனால் இப்போது பெண்கள் மதுவை வெளிப்படையாக அருந்துவது போன்ற காட்சிகளே இடம் பெறுகிறது. இரும்பு குதிரை படத்தில் லட்சுமிராய் பீர் குடிக்கும் பெண்ணாகவே வருகிறார். அரிமா நம்பி படத்தில் ப்ரியா ஆனந்த் தனது பிறந்த நாளை தன் தோழிகளுக்கு தண்ணி பார்ட்டி வைத்து கொண்டாடுகிறார். சரபம் படத்தில் வில்லியாக வரும் கேரக்டரில் சலோனி லுத்ரா தண்ணி அடிப்பவராகவும், போதை ஊசி போடுகிறவராகவும், புகை பிடிப்பவராகவும் நடித்திருக்கிறார், கப்பல் படத்தில் சோனம் பஜ்வாவின் அறிமுக காட்சியே அவர் போதையில் தள்ளாடியபடி வருவதுதான். அவரது கேரக்டரே மது அருந்துவதை கேசுவலாக எடுத்துக் கொள்ளும் கேரக்டராக வடிவமைக்கப்பட்டிருந்தது. கல்கண்டு படத்தில் டிம்பிளும், மேகா படத்தில் சிருஷ்டி டாங்கேவும் மதுகுடித்து போதையாகி ஹீரோவுடன் ஆடிப் பாடினார்கள்.

இது 2014ம் ஆண்டின் கணக்கு. இந்த ஆண்டு இன்னும் எத்தனை படங்கள் வரப்போகிறதோ தெரியவில்லை. இது எங்கே போய் முடியப்போகிறதோ புரியவில்லை. தண்ணி அடிக்கும் காட்சி வரும்போது "மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு" என்ற கார்டு போட்டால் போதும் என்று தணிக்கை குழு கருதுகிறது. அந்த காட்சி எந்த சூழ்நிலையில் வருகிறது. அது அவசியமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. மெல்ல கொல்லும் புற்று நோய் மாதிரி சினிமாவில் நுழைந்து கொண்டிருக்கும் இதனை இப்போது தடுக்காவிட்டால் இனி எப்போதுமே தடுக்க முடியாது.

0 comments

Post a Comment