Pages

Tuesday 13 January 2015

லிங்கா பட விவகாரம். மன்னிப்பு கேட்டார் சிங்காரவேலன். பிரச்சனை சுமூகமாக முடியுமா?

ரஜினி நடித்த லிங்கா படத்துக்கு நஷ்டஈடு கோரி கடந்த 10ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்த சில விநியோகிஸ்தர்கள். ரஜினி குறித்து கூறிய சில கருத்துக்களை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், ரஜினியின் புகழுக்கு இழுக்கு நேரும்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்பதாகவும், தயாரிப்பு நிறுவனம் குறித்து தாங்கள் வெளியிட்ட கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

கடந்த 10ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் தனது தலைமையில் உண்ணாவிரத்ததை வெற்றிகரமாக நடத்திய திருச்சி, தஞ்சை லிங்கா பட விநியோகிஸ்தர் சிங்கார வேலன், மற்றும்செங்கல்பட்டு விநியோகஸ்தர் மன்னன் உள்ளிட்ட சில விநியோகஸ்தர்கள் நேற்று சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறும்போது,

லிங்கா படத்துக்கு நஷ்டஈடு கோரி நாங்கள் இருந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு வேந்தர் மூவிஸ் சிவா எங்களிடம் மன்னிப்பு கடிதம் கோரியுள்ளார். நாங்கள் ஏன் அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும், நடிகர் ரஜினியை காயப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், நாங்கள் அவரை காயப்படுத்தும் விதமாக எதுவும் செய்யவில்லை.

படம் வெளியான சில நாட்களிலேயே படத்தின் வசூல் குறித்து வெளியிட்டது, எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தால், பதட்டமடைந்து சொல்லிவிட்டோம். மேலும், ரஜினி பிறந்தநாள் தேசிய விடுமுறையா? அன்றைய தேதியில் ஏன் படத்தை வெளியிடுகிறீர்கள்? என்று பேசியதற்கும் ரஜினியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

மற்றபடி, படத்தின் தயாரிப்பாளர்களிடம் எந்தவிதத்திலும் மன்னிப்பு கோர முடியாது. இந்த படத்திற்கு உரிய நஷ்டஈடு தராவிட்டால் உண்ணாவிரதம் தொடரும் என்று பேசினார்.

இந்நிலையில், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா நேற்று இந்த பிரச்சினைக்கு மூலகாரணமாக இருந்த சிங்காரவேலனுக்கு அழைப்பு விடுக்காமல், பிற விநியோகஸ்தர்களை மட்டும் அழைத்து லிங்கா படப்பிரச்சினை குறித்து பேசியதாகவும், ஒருசிலரை தவிர மற்றவர்களுக்கு மட்டும் நஷ்ட ஈடு கொடுக்க முன்வந்திருப்பதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

0 comments

Post a Comment