Pages

Wednesday 14 January 2015

ஒரே நேரத்தில் உருவாகும் சூர்யாவின் 4 படங்கள்!

நடிகர் சூர்யா தனது 2D புரொடக்ஷன் மூலம் தற்போது நான்கு புதிய தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். அதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துவரும்
‘மாஸ்’ மற்றும் ஜோதிகா நடித்துவரும் ‘ஹொவ் ஓல்ட் ஆர் யூ’ மலையாள ரீமேக் ஆகிய படங்கள் முடியும் தருவாயிலும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் பெயரிடாத படம் மற்றும் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’24’ ஆகிய படங்கள் ப்ரீ புரொடக்ஷன் பணிகளிலும் இயங்கி வருகிறது.
இதைத்தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றையும் அவரே தயாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாவது முறையாக சூர்யா மற்றும் ஹரி இணையும் இப்படம் சிங்கம் 3 ஆம் பாகமாக இருக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்புகளை இனிவரும் நாட்களில்
எதிர்பார்க்கலாம்.

0 comments

Post a Comment