Pages

Tuesday 13 January 2015

படம் வரும் பின்னே சீடி வரும் முன்னே...!

திருட்டு விசிடி, டிவிடிக்கு எதிராக என்ன தான் கடுமையான சட்டங்கள் இருந்தாலும், அதை ஒழிப்பது என்பது யானை வாய்க்குள்
கை விட்டு குண்டூசியைத் தேடுவது போலத்தான் ஆகி விடுகிறது. என்னதான் அரசாங்கம் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்தாலும், உலகம் முழுவதும் இதற்கென மாபிய கும்பல் போல், பெரிய நெட்வொர்க்கே உள்ளது.

விக்ரம் நடித்த ஐ படம் டேட் பிரச்சனை, சென்சார் பிரச்சனை, பைனான்ஸ் பிரச்சனை என பல பிரச்சனைகளைத் தாண்டி இப்போது தான் 14-ம் தேதி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. படமே இன்னும் ரிலீசாகவில்லை. அதற்குள் வெளிநாடுகளில் ‘ஐ’ படத்தின் திருட்டு விசிடி தயாரிக்கும் வேலைகள் தடபுடலாக நடந்து வருகிறது.

படத்தில் நீங்கள் பார்ப்பது அண்டை நாடான இலங்கையில் ஐ படத்தின் திருட்டு விசிடியை அடுக்கி வைத்திருக்கும் காட்சி தான். அங்குள்ள சிங்கள மக்களும் வாங்கி பார்க்கக்கூடிய வகையில் சிங்கள மொழியிலேயே அட்டையை தயார் செய்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

0 comments

Post a Comment