Pages

Thursday 15 January 2015

தனுஷ் தான் வேண்டுமென்று அடம்பிடித்த அமிதாப்!

ஷமிதாப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்சிகள் தற்போது வட மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய இயக்குனர் பால்கி, “இப்படத்தில் தனுஷ் தான் நடிக்கவேண்டும் என்று அமிதாப்பச்சன்
கேட்டுக்கொண்டார். அவர் விருப்பத்தின்படியே தனுஷை இப்படத்தில் நடிக்க வைத்தேன். படமும் மிக சிறப்பாக வந்துள்ளது” என்றார்.
அதேசமயம் கமலின் இளைய மகள் அக்ஷராவை அறிமுகப்படுத்தும் திட்டம் தன்னுடையது என்றும் அவர் இப்படத்தில் இடம்பெற்றது முழுக்க முழுக்க தனது விருப்பத்தை சார்ந்தது என்றும் பால்கி கூறியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகிறது. படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளிவருகிறது.

0 comments

Post a Comment