Pages

Tuesday 13 January 2015

மேக்கப் இல்லையென்றால் இலியானாவை பார்க்க சகிக்காது. சார்மி

காதல் அழிவதில்லை என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சார்மி தெலுங்கில் சில வருடங்களுக்கு முன் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தற்போது மார்க்கெட்டை இழந்திருந்தாலும், ஒருசில படங்களுக்கு கவர்ச்சி குத்தாட்டம் மட்டும் ஆடி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சியில் டாக் ஷோ ஒன்றில் பங்குபெற்ற சார்மியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, 'நடிகைகளில் யாரை மேக்கப் இல்லாமல் பார்க்க சகிக்காது' என்பதுதான். இந்த கேள்விக்கு ஒரு வினாடி கூட யோசிக்காமல் 'இலியானா' என்று பதிலளித்தார் சார்மி.

இலியானாவும் சார்மியும் 'பாலே டொங்கலு மற்றும் ராக்கி ஆகிய இரு படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும், இருவருக்கும் இடையே அதிக தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இலியானா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியுள்ள சார்மிக்கு இலியானா ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0 comments

Post a Comment