Pages

Monday 19 January 2015

ஷங்கர், விக்ரம், சந்தானம் மன்னிப்பு கேட்க வேண்டும்..! – ‘ஐ’ சர்ச்சை


பொங்கலுக்கு வெளியான ஷங்கரின் ‘ஐ’ உலகம் முழுக்க வெற்றியடைந்து தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் விக்ரமின் நடிப்பு எல்லா தளங்களிலும் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது.
இருந்தும், படத்தின் ஐந்து வில்லன்களில் ‘திருநங்கை’ பாத்திரமும் இருக்கிறது. அந்தப் பாத்திரத்தை விக்ரமும், சந்தானமும் கிண்டலடிக்கும் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன
. இது குறித்து நடுநிலையுள்ள அனைத்து விமர்சகர்களுமே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இந்நிலையில், தங்களைக் கேவலப்படுத்திப் படமெடுத்ததாக இயக்குநர் ஷங்கர் மற்றும் அதில் நடித்த விக்ரம், சந்தானம் மீது தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய சினிமா தணிக்கைக் குழுவின் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ள சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு இன்று காலை திருநங்கைகள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பொறியியல் துறை மாணவியான பானு, மருத்துவராகப் பணியாற்றும் செல்வி மற்றும் ஸ்வப்னாவின் தலைமையில் ஒன்றுகூடிய திருநங்கைகள் படத்துக்கெதிராக கோஷம் எழுப்பினார்கள். இயக்குநர் ஷங்கரின் படத்தை மிதியடியால் அடித்தார்கள். பின்னர் அவர்கள் தணிக்கைக்குழுவின் பிராந்தியத் தலைவர் பக்கிரிசாமியிடம் ‘ஐ’ படத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு புகார் அளித்தார்கள்.
இதுகுறித்து மீடியாக்களிடம் அவர்கள் பேசும்போது, “ஐ’ படத்தில் தங்களை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும். இப்படி திருநங்கைகளை இழிவுபடுத்திய இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் விக்ரம், சந்தானம் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்..!” என்று கோரிக்கை வைத்தார்கள்.

0 comments

Post a Comment