Pages

Tuesday 20 January 2015

1980-களில் கலக்கிய கதாநாயகர்கள்– நாயகிகள் சந்திப்பு: சிம்பு, நமீதா நடனம்

 திரையுலகில் 1980-களில் கலக்கிய கதாநாயகர்களும், கதாநாயகிகளும் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் வருடம் தோறும் இதற்காக ஒரு நாளை ஒதுக்குகின்றனர்.

அன்றைய தினம் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து எல்லோரும் ஒரே சீருடையில் பங்கேற்று ஆட்டம், பாட்டம் என கொண்டாடி வருகின்றனர்.
இந்த வருடமும் அதுபோன்ற சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். விரைவில் இச்சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் இன்னொரு விசேஷமாக இன்றைய இளம் ஹீரோக்களும் ஹீரோயின்களும் கலந்து கொள்கிறார்கள். தடபுடலான விருந்தும் நடக்க உள்ளது.


இதில் 1980-களின் கதாநாயகர்கள் ரஜினி, கமல்ஹாசன், மோகன், சுதாகர், மம்முட்டி, கார்த்திக், சுரேஷ், விஜய்பாபு, விஜயகுமார், அம்பரீஷ், கன்னட ரவிச்சந்திரன், கதாநாயகிகள் பூர்ணிமா, அம்பிகா, ஸ்ரீப்ரியா, ரேவதி, சுகாசினி, குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், ராதிகா, லிசி, சசிகலா, நதியா, மாதவி, ஊர்வசி, சுமலதா, சுவப்னா, சரிதா, மதுபாலா உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இதில் இளம் நடிகர், நடிகைகள் சிம்பு, வைபவ், மகத், வேதிகா, பிந்து மாதவி, நமீதா உள்ளிட்டோர் நடன நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

0 comments

Post a Comment