Pages

Monday 12 January 2015

ஆணும் பெண்ணும் புரிந்துகொண்டால் போதும். சேர்ந்து வாழலாம். திருமணம் தேவையில்லை. ரீமா கல்லீங்கல்:

‘‘ஒரு ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டபின், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை’’ என்று நடிகை ரீமா கல்லிங்கல் கூறினார்.


பரத் நடித்த ‘யுவன் யுவதி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், ரீமா கல்லிங்கல். கேரளாவை சேர்ந்தவர். கேரளா கபே, ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், சிட்டி ஆப் காட், நீலத்தாமரா, 22 பீமேல் கோட்டயம், நித்ரா உள்பட பல மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

22 பீமேல் கோட்டயம், நித்ரா ஆகிய படங்களில் நடித்ததற்காக, இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருது, சமீபத்தில் இவருக்கு கிடைத்தது.

காதல்

ரீமா கல்லிங்கல், ‘22 பீமேல் கோட்டயம்’ படத்தில் நடித்தபோது இவருக்கும், அந்த படத்தின் டைரக்டர் ஆஷிக் அபுவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகினார்கள்.

அதைத் தொடர்ந்து இரண்டு பேரும் ஒரே வீட்டில் தங்க ஆரம்பித்தார்கள். திருமணம் செய்து கொள்ளாமலே கணவன்–மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இது, மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருவருமே அதை கண்டுகொள்ளவில்லை. சேர்ந்து வாழ்வது பற்றி கருத்து தெரிவிக்கவும் இல்லை.

தவறு இல்லை

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளாமலே டைரக்டர் ஆஷிக் அபுவுடன் சேர்ந்து வாழ்வது பற்றி முதல்முறையாக ரீமா கல்லிங்கல் வாயை திறந்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:–

‘‘ஒரு ஆணும், பெண்ணும் மனதளவில் இணைந்து, ஒருவரையொருவர் புரிந்து கொண்டபின், சேர்ந்து வாழ்வதில் தப்பு இல்லை. திருமணம் செய்து கொண்டால்தான் சேர்ந்து வாழ முடியும் என்பதில் எனக்கு உடன்பாடும் கிடையாது.

பிடித்த வாழ்க்கை

மனதளவில் இணைந்தாலே போதும். புரிதல்தான் மிக முக்கியமானது. கருத்து ஒற்றுமையும், புரிதலும் இருந்தால் ஒரு ஆணும், பெண்ணும் தாராளமாக சேர்ந்து வாழலாம்.

எனக்கு இந்த வாழ்க்கை பிடித்து இருக்கிறது. இதை தொடர்வதுதான் சிறந்தது என்று கருதுகிறேன்.’’

இவ்வாறு ரீமா கல்லிங்கல் கூறியிருக்கிறார்.

0 comments

Post a Comment