Pages

Monday 19 January 2015

இது நம்ம ஆளு (2015) திரைப்படத்தின் டீசர் விமர்சனம்

 
சிலம்பரசன் மற்றும் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தைப் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள டீசரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். முன்னாள் காதலர்களான சிம்பு, நயன்தாரா ஜோடியை வைத்து வித்தியாசமான காதல்
கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். ‘ஆம்பளைங்க மனச ஆண்டவன் படைச்சிருக்கான்.. ஆனா பொம்பளைங்க மனச சைனாக்காரன் படைச்சிருக்கான்;;;’ போன்ற தத்துவ வசனங்கள் இளைய தலைமுறை ரசிகர்களை ஈர்த்துள்ளன. திரைப்படத்தின் முன்னோட்டத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் வசனங்கள் கூடுதல் சிறப்பை பெற்றுள்ளன.

‘நீ யாராயாச்சும் லவ் பண்ணி இருக்கியா?’ என்று நயன்தாரா கேள்வி கேட்பதோடு துவங்கும் முன்னோட்டம் பல நக்கல் வசனங்களை தாண்டிச் சென்று, இறுதி அங்கமாய் நடிகர் சந்தானம் தோன்றி ‘விரைவில் வருகிறோம்; என்பதை போல் முடித்துள்ளனர்.

0 comments

Post a Comment