Pages

Tuesday 13 January 2015

கணவரை விவாகரத்து செய்துவிட்டு ராம்சரணை திருமணம் செய்ய திட்டமா? சானியா மிர்சா அதிர்ச்சி.

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது பாகிஸ்தான் கணவர் சோயீப் மாலிக்கை விவாகரத்து செய்துவிட்டு தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவை மறுமணம்
செய்யப்போவதாக வதந்திகள் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது தனது கணவருடன் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து இந்த வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார் சானியா. நானும் எனது கணவரும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கில் குடும்பம் நடத்தி வருகிறோம். ராம்சரணுடன் நிறைய பார்ட்டிகளில் கலந்து கொண்டிருக்கின்றேன். அவருடன் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறேன். ஆனால் அவர் மீது எனக்கு எந்தவிதமான தவறான அபிப்பிராயமும் கிடையாது.

நான் மாலிக்கை விவாகரத்து செய்யப்போவதாக வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது எனது கணவரின் துணையுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

0 comments

Post a Comment