Pages

Sunday 18 January 2015

மீசையை முறுக்கும் கார்த்தி – கொம்பன்

அண்ணனைப் போலவே மீசையை முறுக்கிக் கொண்டிருக்கும் தம்பிதான் கார்த்தி. இவரின் இந்த முறுக்குமீசை வேடம் அடுத்தபடமான கொம்பனுக்காகத்தான். ‘கொம்பன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பு பொங்கலுடன் வெளியிடப்பட்டது.
படத்தில் சண்டைக் காட்சிகள் மற்றும் கோபக்காட்சிகள் போன்றவற்றிற்காகவே மீசையினை கார்த்தி முறுக்கிவைத்திருப்பது போலத் தெரிகிறது.

கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்கிரண், கோவை சரளா, தம்பி ராமையா போன்றோரும் இணைந்துள்ளனர். இப்படத்தினை இயக்கியவர் ஏற்கனவே ‘குட்டிப்புலி’ படத்தினை அளித்த முத்தையா ஆவார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரவுள்ளன. பட்த்தின் ஃபர்ஸ்ட் லுக்கினைப் பார்க்கும்போது படத்தில் சண்டைக்கு குறைவிருக்காது என்று தெரிகிறது, அத்துடன் ராஜ்கிரணுக்கும் படத்தில் நல்ல மவுசு இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோவை சரளா கார்த்திக்கு அம்மாவாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளை அமைக்கும் சூப்பர் சுப்ராயன் கொம்பன் படத்தில் வில்லனாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. படத்தில் கார்த்தி ஆடு விற்கும் இளைஞனாக வருவார் என்று போஸ்டரைப் பார்த்தால் தெரிகிறது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

0 comments

Post a Comment